தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் செய்யும் நடிகர் தல அஜித். இவர் சினிமாவைத்தாண்டி கார் மற்றும் பைக் ஓட்டுவதில் வல்லவர் என்பது அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் கூட ஹெலிகாப்டரும் ஓட்டத்தெரிந்த ஒரே நடிகர். ஆனால் இவரை ஒருமுறை இவரது மகள் அனோஷ்கா படிக்கும் பள்ளி ஆண்டுவிழாவில் எல்லா பெற்றோருடனும் சேர்ந்தது டயர் ஓட்டச்சொன்னார்கள்.
கொஞ்சமும் தயங்காமல் மகளுக்காக இதை செய்தார். இதுபோல மகளின் மீது அதிக பாசம் கொண்ட இந்த சம்பவம் தான் விஸ்வாசம் படத்திலும் மகள் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளாக இருக்குமாம்.
நயன்தாராவுடனான காதல் காட்சிகள் கூட அஜித்-ஷாலினியின் நிஜ காதலை பிரதிபலிக்கும் வண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆக விஸ்வாசம் தல ரசிகர்களுக்கு மனதுக்கு மிக நெருக்கமாக படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.