ரஜினி காந்த், கமல் ஹாசனுக்கு இணையாக தமிழ் சினிமாவில் ரசிகர்களை பெற்ற நடிகர் விஜய் காந்த். தன்னலம் கருதாது பலருக்கு உதவி செய்பவர் என்ற பெருமை இவருக்கு எப்போதும் உண்டு.
அரசியல் பிரமுகராக இருந்தாலும் வெளியிடங்களில் இவர் சாதாரண மனிதராக தான் இருப்பார் என்பதை அவரின் பல புகைப்படங்கள் நமக்கு எடுத்துச்சொன்னது.
அண்மைகாலமாக உடல் நலக்குறைவால் மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அவர் கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்றார்.
அங்கு சென்ற அவர் நண்பர் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடியுள்ளார்.