பிரியம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழில் முதன் முதலில் அறிமுகமானவர் நடிகை மந்த்ரா. இவர் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் ஒரு சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தும் உள்ளார்.
மேலும் இவர் நடிகர் விஜய்யுடன் லவ் டுடே படத்திலும், தல அஜித்துடன் ரெட்ட ஜடை வயசு போன்ற திரை படங்களில் நடித்த பின்னர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
மேலும் அருண் விஜய், பிரபு ஜெயராமன் என 90களில் பல படங்களில் தமிழில் நடித்திருக்கிறார் நடிகை மந்த்ரா.
அதன் பிறகு உதவி இயக்குனர் நிவாஸ் என்பவரை திருமணம் செய்து ஹைதராபாத்தில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரையும் அவரா இது என கேள்வி கேட்க வைத்துள்ளது. அந்த அளவுக்கு அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் நடிகை மந்த்ரா.