தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் ராகுல் ப்ரீத் சிங். அவர் தற்போது பல டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் திருமணம் பற்றி பேசியுள்ளார். அவரின் அம்மா இவரை விரைவில் திருமணம் செய்துகொள்ளும்படி கூறுகிறாராம்.
“என் அம்மா சொல்வது போன்று உடனே திருமணம் செய்து கொள்ள எனக்கு காதலர் இல்லை. அதனால் யாரையாவது பார்த்துக் கொடுக்குமாறு நண்பர்களிடம் தெரிவித்துள்ளேன். 6 அடி உயரம் இருக்க வேண்டும். முக்கியமாக தெலுங்கு பேசுபவராக இருக்க வேண்டும்,” என ராகுல் தெரிவித்துள்ளார்.