நடிகை அமலாபால் விவாகரத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். திருட்டுபயலே 2 மற்றும் ராட்சசன் போன்ற அவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது அவர் ஆடை, அதோ அந்த பறவை போல உட்பட சில படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் தான் லுங்கியில் சுற்றியபோது எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். “லுங்கி எனக்கு பிடிக்கும். பொய் சொல்ல முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.