சரவணன் மீனாட்சி என்கிற சீரியலில் தொடர்ந்து 5 வருடங்களுக்கும் மேல் நடித்தவர் ரச்சிதா மஹாலக்ஷ்மி. இவர் அந்த சீரியலுக்கு பிறகு சிறிய இடைவெளி எடுத்திருந்தார்.
அடுத்த சீரியல் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரது கேள்வியாகாவே இருக்கும். இந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் ரச்சிதா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புதிய சீரியலில் நடிக்க துவங்கியதை புகைப்படம் மூலம் உறுதிப்படுத்திய அவர், மற்ற தகவல்களை கூற மறுத்துள்ளார். அதற்காக காத்திருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.