தாமிரபரணி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வந்தவர் பானு. அந்த படமும், பாடல்களும் இவரை ஒரு பிரபலமாக்கியது. அடுத்த நயன்தாரா என இவரை ரசிகர்கள் புகழ்ந்தார்கள்.
பின் தமிழ் சினிமாவில் அடுத்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாய்ப்பில்லாமல் மலையாள சினிமா பக்கம் ஒதுங்கினார். பின்னர் கேரளாவை சேர்ந்த பாடகர் ரிங்கு டாமி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். குடும்பம், குழந்தை என சினிமா பக்கமே வராமல் இருந்தார்.
இந்நிலையில் தற்போது ராதிகா நடித்துள்ள வரலாற்று சீரியலான சந்திரகுமாரியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இதில் அவரை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளார்கள்.