நடிகை சோனாலி பிந்த்ரே தற்போது பலருக்கும் உதாரணம் போலாகிவிட்டார். பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வந்த அவர் அண்மைகாலமாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார்.
தற்போது அதிலிருந்து அவர் மீண்டு வந்துள்ளார். அவரின் இந்த முயற்சி அந்நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கும் தன்னம்பிக்கை அளித்துள்ளது.
இந்நிலையில் அவர் தான் சினிமாவில் நடிக்க தயாராகிவிட்டதாக ஆர்வத்துடன் கூறியுள்ளனர். இதனை அவரது ரசிகர்கள் மிகவும் வரவேற்றுள்ளார்கள்.