மறுமணத்திற்கு ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்-தொழில் அதிபருமான விசாகனுக்கும் வரும் 11ம் தேதி மறுமணம் நடைபெற உள்ளது. மறுமணத்தை போயஸ் கார்டன் வீட்டிலேயே சிம்பிளாக நடத்துகிறார்கள். மறுமணத்திற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் சவுந்தர்யா ட்விட் செய்துள்ளார்.
சவுந்தர்யா பட்டுப்புடவை கட்டி புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மறுமணத்திற்கு ஒரு வாரம் தான் உள்ளது என்பதை நினைவூட்டியுள்ளார்.
#OneWeekToGo #BrideMode #Blessed 😊😊😊🙏🏻🙏🏻🙏🏻 #VedVishaganSoundarya #Family ❤️❤️❤️ pic.twitter.com/fJYkHp8J1l
— soundarya rajnikanth (@soundaryaarajni) February 4, 2019
புது வாழ்க்கையை துவங்க உள்ள சவுந்தர்யாவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் வந்து குவிகிறது.
மறுமண வேலைகளுக்கு இடையே சினிமா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்படும் இணையதள தொடரை சவுந்தர்யா தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.