இளையராஜா இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இசையமைப்பாளர். இவருடைய இசையில் 1000 படங்களுக்கு மேல் வந்துள்ளது.
இவருக்காக இளையராஜா-75 என்ற பிரமாண்ட நிகழ்ச்சியை விஷால் ஏற்பாடு செய்தார், இதில் ரஜினி, கமல், ஷங்கர் என பலரும் கலந்துக்கொண்டனர்.
ஷங்கரிடம் தொகுப்பாளர் நீங்கள் இளையராஜாவுடன் எப்போது பணியாற்றுவீர்கள் என்று கேட்க, ஷங்கருக்கு ஒரு நொடி கொஞ்சம் தர்மசங்கடமாக இருந்தது.
உடனே இளையராஜா அவரை கூல் செய்யும் விதமாக ‘அவர் அவருக்கு யாருடன் பணியாற்ற தோன்றுகின்றதோ, அவர்களுடன் தான் பணியாற்ற வேண்டும், மேடையில் இது தேவையில்லாத கேள்வி’ என்று சொல்லி பதிலடி கொடுத்தார்.