நடிகர் சந்தானம் டிவியில் நடிக்க துவங்கி பின்னர் சினிமாவில் காமெடியனாக கலக்கி, அதன்பின் தற்போது ஹீரோவாக மட்டும் நடித்து வருகிறார்.
அவரை தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயப்படுத்தியது விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளுசபா நிகழ்ச்சி தான். அவர் சினிமாவில் அறிமுகமாகவும் அது தான் காரணம்.
லொள்ளு சபா இயக்குனர் ராம் பாலா தற்போது சந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு படத்தினை இயக்கியுள்ளார். அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் சந்தானம் லொள்ளு சபாவில் சந்தானம் வாங்கிய சம்பளம் எவ்வளவு என கூறியுள்ளார்.
“துவக்கத்தில் 50 ருபாய் சம்பளம் வாங்கிய சந்தானம், நான் லொள்ளு சபாவில் இருந்து வெளியில் வரும் போது 1200 ருபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார். தற்போது ஹீரோவாக அவர் பலகோடி சம்பாதிக்கிறார்” என ராம்பாலா தெரிவித்துள்ளார்.