விஸ்வாசம் தமிழ் சினிமாவில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது. இன்றும் தமிழகம் முழுவதும் இப்படம் 100 திரையரங்கில் வெற்றி நடைப்போடுகின்றது.
இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் பாடல்களும் தற்போது செம்ம சாதனையை செய்துள்ளது.
ஆம், டி.இமான் இசையில் விஸ்வாசம் படத்தின் பாடல்கள் அனைத்தும் சேர்த்து யு-டியுபில் 100 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது.
இதில் குறிப்பாக கண்ணான கண்ணே பாடல் மட்டும் 30 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது. கண்டிப்பாக விஸ்வாசம் படத்தின் பாடல்கள் தான் அஜித் திரைப்பயணத்தில் அதிகம் ஹிட்ஸ் கொடுத்த பாடலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.