90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ரோஜா திகழ்ந்தவர். தமிழில், 1992ஆம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகமானார்.
கடந்த 2002ஆம் ஆண்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
மகள் அன்ஷு மாலிகா தற்போது வளர்ந்து விட்டார். அவரின் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இவர் பாடல் மற்றும் நடனம் கற்றும் வருகிறார். பள்ளி படிப்பை முடித்தவுடன் அம்மாவை போலவே நடிக்க வருவார் என்றும் கூறப்படுகின்றது.
அவரின் புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய மகளா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.