தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் நடித்து வருபவர் நடிகை ராய் லட்சுமி. ஹிந்தியும் கால் பதித்த முதல் படமான ஜூலி படமும் சரியாக அமையவில்லை.
சமூகவலைதளங்களில் அவர் கவர்ச்சி புகைப்படங்கள் பல கோணத்தில் எடுத்து பதிவிட்டு வருகிறார். இது ரசிகர்களை பொறுத்தவரை சகஜமாகிவிட்டது.
அந்த வகையில் அவரின் புகைப்படத்தை பார்த்தவர்கள் சிலர் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என கூறி அண்மையில் இது வைரலாக பரவியது. இந்நிலையில் அவர் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதில் அவர் வேலையற்ற சிலர் இது போன்ற முட்டாள் தனமாக என்னை பற்றி வதந்திகளை பரப்புகிறார்கள். எனக்கு பல காதல், காதல் தோல்விகள் இருக்கிறது என்பதற்காக உங்கள் விருப்பத்திற்கு என்ன வேண்டுமானாலும் சொல்வதா.
நாள் மாங்காய் சாப்பிடுவதை பார்த்த யாரோ நான் கர்ப்பமாக இருக்கிறேன் என வதந்திகளை கூறியிருக்கிறார்கள். இதை நிறுத்துவதற்கு நான் நீதிமன்றம் கூட செல்வேன் என கூறியுள்ளார்.