Home / செய்திகள் / 1999ல் நச்சிக்கேத்தா .! இன்று 2019ல் அபிநந்தன்..! பாகிஸ்தானிடம் சிக்கியது எப்படி..? பின் வெளிவந்தார்களா..?

1999ல் நச்சிக்கேத்தா .! இன்று 2019ல் அபிநந்தன்..! பாகிஸ்தானிடம் சிக்கியது எப்படி..? பின் வெளிவந்தார்களா..?

பாகிஸ்தான் படையிடம் சிக்கியுள்ளார் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன். இந்த நேரத்தில் நமக்கு நச்சிகேத்தா நினைவுக்கு வருகிறார்.

1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரின்போது ஹீரோவாக உயர்ந்தவர்தான் நச்சிகேத்தா. இன்னமும் நம்மால் மறக்க முடியாத விமானி கம்பம்பட்டி நச்சிகேத்தா. அப்போது இவருக்கு வயது வெறும் 26 தான்.

பாகிஸ்தானில் இருந்த ராணுவ முகாம்களை இந்தியா தாக்கும் நோக்கில் விமானப்படை விமானங்கள் கிளம்பின. அப்போது நச்சிகேத்தா ஓட்டிச் சென்ற போர் விமானம் தாக்குதலை முடித்து விட்டுத் திரும்பியபோது பழுதடைந்தது. துரதிர்ஷ்டவசமாக அவர் பாகிஸ்தான் பகுதியில் போய் விழுந்து விட்டார். அவர் சிறை பிடிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் பிடியில் சிக்கிய அவரை மிகக் கடுமையாக கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்தது பாகிஸ்தான் படை. ஆனாலும் ஒரு ரகசியத்தையும் அவர் கசிய விடவில்லை. தைரியமாக அந்த கொடூரத்தை சந்தித்தார். பாகிஸ்தான் உயர் அதிகாரி ஒருவரே நச்சிக்கேத்தாவின் மன தைரியத்தைப் பார்த்து வியந்து போய் சித்திரவதையை நிறுத்தச் சொன்னதாக பின்னாளில் தொலைக்காட்சி பேட்டியின்போது தெரிவித்தார் நச்சிக்கேத்தா.

பாகிஸ்தான் படையினர் வெறி பிடித்தவர்கள் போல நடந்து கொண்டனர். கொல்ல முயன்றனர். ஆனால் அந்த அதிகாரி முதிர்ச்சியுடன் இருந்தார். என்னைப் போர்க் கைதி என்று கூறி வீரர்களை அமைதிப்படுத்தினார் என்றார் நச்சிக்கேத்தா. 1999ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி வரை போர்க் கைதியாக இருந்தார் நச்சிக்கேத்தா. அதன் பின்னர் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

நாடு திரும்பிய ஹீரோ நச்சிக்கேத்தாவுக்கு விமானப்படையின் மிக உயரிய விருதான ‘வாயு சேனா’ விருது வழங்கப்பட்டது. இப்போது அபிநந்தனும் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட நச்சிக்கேத்தாவின் நிலைதான் இவருக்கும் இருக்கும். ஆனாலும் வெளியாகியுள்ள வீடியோ காட்சிகளைப் பார்த்தால் அபிநந்தன் Abhinandan மிகவும் மன உறுதியுடன் இருப்பது போலவே தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *