சென்ற வாரம் தடம், 90ml, தாதா87, திருமணம் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. 90ml படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் மோசமான விமர்சனங்கள் காரணமாக பின்னடைவை சந்தித்துள்ளது.
பாக்ஸ்ஆபிஸில் அருண்விஜய் நடித்த தடம் படம் தான் முதலிடத்தை பிடித்துள்ளது. முதல் மூன்று நாட்களில் மட்டும் 5.84 கோடி ருபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தடம் படத்திற்கு தியேட்டர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது, அதனால் வசூல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.