வாரணம் ஆயிரம் என்ற படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கவர்ந்தவர் சமீரா ரெட்டி. அவர் அதன் பிறகு பிரபல தொழிலதிபர் Akshai Varde என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
அவர்களுக்கு தற்போது 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது சமீரா மீண்டும் கர்பமாக உள்ளார். இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து மொத்த குடும்பமும் காத்திருக்கிறது.
சமீரா கர்பமாக இருப்பதை உறுதி செய்யும் புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.