கடந்த 90களில் முத்து, ரசிகன் போன்ற படங்களில் நடித்த கவர்ச்சி நடிகையாக வலம் வந்த விசித்ரா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்த விசித்ராவை ரசிகர்கள் நன்றாக அடையாளம் காண்பது முத்து படத்தில் தான்.
2011ம் ஆண்டு இவரது தந்தை ஒரு திருட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டார். அதன் பின்னர் திருமணம் ஆகி புனேவில் செட்டில் ஆகிவிட்டார் விசித்ரா.
அண்மையில் இவர் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.