பிரபல தனியார் தொலைக்காட்சி மக்கள் மத்தியில் நடத்திய கருத்து கணிப்பின் போது கூலி தொழிலாளி ஒருவர் ஆங்கிலத்தில் பேசி அசத்திய சுவாரசியமான சம்பவம் நடந்து உள்ளது.
அடுத்து யார் பிரதமராக வரக்கூடிய வாய்ப்பு உள்ளது? என கூலி தொழிலாளி ஒருவரிடம் செய்தியாளர் இந்தியில் கேள்வி கேட்க கூலி தொழிலாளி ஆங்கிலத்தில் சரளமாக விளக்கமளித்தார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி பற்றியும் இந்திராகாந்தி இருந்தபோது இருந்த ஆட்சி பற்றியும், அப்போது இருந்த வேலைவாய்ப்பு பற்றியும் இப்போது உள்ள வேலைவாய்ப்பு பற்றியும் ஆங்கிலத்தில் தெரிவித்திருந்தார். இவருடைய ஆங்கில புலமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் செய்தியாளர், இந்தியில் பேசி சமாளிக்கும் வீடியோவை பார்க்க முடிகிறது.
கூலி தொழிலாளி ஆங்கிலம் ஹிந்தி என சரளமாக இரு மொழியிலும் பேசி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை பார்க்கும் மக்கள் இவருடைய பேச்சை கேட்டு ரசித்து வருகின்றனர்.