தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் டாப்ஸி. இதனையடுத்து பாலிவுட்டிலும் நல்ல படங்களில் நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.
தன் நடிப்பை வெளிப்படுத்தும் அளவிற்கு கதையில் முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படி இப்போது ஒரு பாலிவுட் படத்தில் 60 வயது முதியவராக நடிக்கிறாராம்.
அதற்கான ஃபஸ்ட் லுக் இன்று வெளியாக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் டாப்ஸியா என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.