ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் அமித் ஷா இயக்கத்தில் இன்னும் பெயர் சூட்டப்படாத ஒரு படத்தில் நாயகியாக நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இதை தொடர்ந்து இந்திப்பட வாய்ப்புகளுக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் மும்பைக்கு செல்வதாகவும். அங்கு செல்லும் அவர் பாலிவுட் கலாச்சாரத்திற்கு உகந்தபடி பல பார்ட்டிகளில் தாராளமாகக் கலந்துகொள்வதாகவும் செய்திகள் வெளியாகின.
கீர்த்தி சுரேஷ் ஜான்வி கபூருடன் நல்ல நட்பு பாராட்டி வருகிறார். இந்நிலையில் இருவருக்கும் பார்ட்டிக்குச் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.