அருவி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை வென்றவர் அதிதி பாலன். இதை தொடர்ந்து இவர் உச்சத்தை தொடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், இவரோ அடுத்து இதுவரை எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகவில்லை. இதற்கு காரணம் கேட்டால் அருவி போல் அழுத்தமான கதை கிடைத்தால் நடிப்பேன். இல்லை என்றால் நடிக்கவே மாட்டேன் என்கின்றாராம்.
சமீபத்தில் போட்டோஷுட் ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ளார். இதில் செம்ம ஸ்டைலாக அதிதி தானா இது என்று கேட்கும் அளவிற்கு ஆளே மாறிவிட்டார்.
படத்தில் தன்னை ஒல்லியாக மாற்றிக்கொண்ட அவர், அதன்பின் உடல் தகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளார். தற்போது அதிதியின் போட்டோஷுட் சமுகவலைத்தளங்களில் பரவிவருகிறது.