சிம்பு என்ற பெயர் சில வருடங்களுக்கு முன் பல சர்ச்சைகளில் சிக்கியது. படங்கள் நடிக்காமல் இருந்தார், இதனால் அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டாலும் அவருக்கு ஆதரவாகவே இருந்தார்.
இப்போது அடுத்தடுத்து படங்கள் நடித்து ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறார் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் மாநாடு படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங்.
இந்நிலையை பிரபல காமெடி நடிகர் கூல் சுரேஷ் சமீபத்தில் நடந்த ஒரு இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது சிம்பு யாரை திருமணம் திருமணம் செய்யுவுள்ளார் என தனக்கு தெரியும் என கூறியுள்ளார்.
“சிம்புக்கு விரைவில் திருமணம். பொண்ணு யாரு. எப்ப கல்யாணம்னு எனக்கு தெரியும். யாரும் டி.ராஜேந்தரை தொந்தரவு செய்ய வேண்டாம்,” என அவர் கூறியுள்ளார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.