விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கவுள்ளது. அதையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார். இதில் யாரெல்லாம் போட்டியாளராக வருவார்கள் என ஒரு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
பொதுவாக பிரபலங்கள் மட்டுமின்றி யாரென்றே தெரியாத புதுமுகங்கள் கூட பிக்பாஸில் போட்டியாளராக வரலாம். ஹிந்தி பிக்பாஸில் அப்படித்தான் பலருக்கு போட்டியாளராகும் வாய்ப்பு வழங்குவார்கள்.
ஆனால் தமிழ் பிக்பாஸில் போட்டியாளராக செல்ல சில தகுதிகள் வேண்டும் என்கிறார்கள், அது என்னிடம் இல்லை என பிரபல நடிகை ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீதிவ்யாவின் தோழியாக வரும் நடிகை ஷாலு தான் இப்படி பேசியுள்ளார்.