ஆடுகளம், ஆரம்பம் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை டாப்ஸி. அவர் கடைசியாக தமிழில் வை ராஜா வை படத்தில் தான் நடித்திருந்தார்.
நடிகை டாப்ஸி ஆரம்பத்தில் கதை சரியாக தேர்வு செய்யாமல் கவர்ச்சி என்ற ரூட்டில் சென்றவர். பின் தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அடுத்தடுத்த வெற்றியால் இப்போது டாப்ஸி மும்பையில் ஒரு புதிய சொகுசு வீடு ஒன்று வாங்கியுள்ளார். வீட்டின் மொத்த விலை ரூ. 6 கோடி இருக்கும் என்கின்றனர்.
அவரது நடிப்பில் ஹிந்தியில் வந்த பிங்க் என்ற படத்தின் ரீமேக்கில் தான் இப்போது அஜித் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் நடித்து வருகிறார்.