பிக்பாஸ் 3வது சீசன் தமிழில் வரும் ஜுன் 23ம் தேதியில் இருந்து தொடங்க இருக்கிறது. அதையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார்.
தொலைக்காட்சி ரசிகர்களும் அந்த நாளுக்காக மிகவும் ஆவலாக உள்ளனர். இந்நிகழ்ச்சியின் 3வது சீசன் புரொமோக்கள் இதுவரை வெளியான நிலையில் நிகழ்ச்சி குறித்து ஒரு புது அப்டேட்.
தற்போது பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
பிக்பாஸ் கதிரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தினை அவர் வெளியிட்டுள்ளதால் அவரும் போட்டியாளராக செல்லுகின்றாரா என்ற குழப்பம் அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.