டிடி சின்னத்திரை தொகுப்பாளர்களின் லேடி சூப்பர்ஸ்டார். இவருக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் பலம் உள்ளது. இவரது நிகழ்ச்சியை பார்க்கவே பலரும் காத்திருப்பார்கள்.
தற்போது சின்னத்திரையில் இவர் புதிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கின்றார். அதையும் தாண்டி டிடி தற்போது ரேடியோவிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.
சமீபத்தில் டிடி தனது மேககப் இல்லா புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேககப் இல்லா இந்த ட்ரெண்டை கடந்த சில நாட்களாகவே நடிகைகள் பலரும் பின்பற்றி வருகின்றனர்.
மேக் அப் இல்லா புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் மேக் அப் இல்லாமல் இன்னும் அழகாக இருக்கீர்கள் என புகழ்ந்து வருகின்றனர்.