சின்னத்திரை சீரியல்களில் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானது சின்னதம்பி சீரியல். இந்த சீரியலின் நாயகனாக நடிப்பவர் பிரஜன். இவருக்கும் சாண்ட்ரா என்ற நடிகையை பல வருடங்களுக்கு முன் திருமணம் செய்தார்.
நடிகை சாண்ட்ரா மற்றும் நடிகர் பிரஜின் ஜோடிக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது. தற்போது ப்ரஜின் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ பதிவிட்டுள்ளார்.
அதில் சாண்ட்ரா தன் இரண்டு குழந்தைகளையும் தோளில் வைத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
குழந்தைகள் பற்றி அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். ஆனால் தற்போது தான் முதல் முறையாக குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.