Home / பிக் பாஸ் / தடை செய்ய படுமா பிக்பாஸ் சீசன் 3..? சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கேட்டு மனுதாக்கல்

தடை செய்ய படுமா பிக்பாஸ் சீசன் 3..? சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கேட்டு மனுதாக்கல்

பிக்பாஸ் மூன்றாவது சீசன் வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்கவுள்ளது. துவங்க உள்ளதால் பல்வேறு ஏற்பாடுகள் தொலைக்காட்சி நிறுவனம் செய்து வருகிறது.

இந்நிலையில் போட்டியாளர் சிலரின் பெயர் மட்டும் உறுதியாகியுள்ளது. ஆனால் தற்போது சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் நிகழ்ச்சிக்கு தடை கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.

கவர்ச்சி உடை, இரட்டை வசனங்கள் மூலம் பார்வையாளர்களை கெடுக்கும் விதமாக இருப்பதால். நிகழ்ச்சியை இந்தியன் பிராட்காஸ்ட் ஃபவுண்டேசனின் (IBF) தணிக்கை சான்று பெறாமல் ஒளிபரப்பக்கூடாது எனவும் அந்த மனுவில் கூறியுள்ளார்.

வழக்கு விசாரணை விரைவில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இன்றும் விஜய் டிவியில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *