இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாங்கிய கடனுக்காக விஜயகாந்தின் ரூ.100 கோடி சொத்துகள் ஏலத்துக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5 கோடியே 52 லட்சத்து 73 ஆயிரத்து 825 ரூபாயை கடனாகப் பெற்றுள்ளார் விஜயகாந்த். இந்தத் தொகை ஸ்ரீஆண்டாள் அழகர் எஜுகேசனல் டிரஸ்ட் பெயரில் வாங்கப்பட்டுள்ளது.
இதற்கு ஜாமீந்தாரர்களாக விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரி தெரு, மற்றும் வேதவள்ளி தெருவில் உள்ள விஜயகாந்துக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் ஆண்டாள் அழகர் கல்லூரியும் ஏலத்துக்கு வருவதாக அறிவிப்பு
ஏலத்துக்கு வரும் விஜயகாந்தின் சொத்துக்களின் மதிப்பு சுமார் 100 கோடிக்கும் அதிகம் என்பது குறிப்பிட தக்கது.