தமிழ் சினிமா நடிகர்களில் தனி அடையாளம் பெற்றவர் நடிகர் மன்சூர் அலிகான். பல படங்களில் அவரை வில்லனாக நாம் பார்த்திருக்கலாம். மிரட்டலாக பேசி கலக்கியிருப்பார்.
சினிமாவை தாண்டி சமூகத்தில் நடக்கும் அநியாயத்திற்கு யாருக்கும் பயப்படாமல் எதிர்த்து குரல் கொடுப்பவர் நடிகர் மன்சூர் அலிகான்.
இவரது மகளுக்கு இரு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இப்படிப்பட்ட வில்லனுக்கு இவ்வளவு அழகான மகளா என்று ஆச்சரியப் பட்டுள்ளனர்.
சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு பல்வேறு வேலைகளை செய்து மக்களிடம் பாராட்டைப் பெற்றவர்.