சென்ற வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டார். அடுத்த வாரம் யார் வெளியேற்றப்படப்போவது என்பதற்கான நாமினேஷன் நடந்தது.
அதில் பெரும்பாலான போட்டியாளர்கள் மீரா மிதுன், சரவணன் மற்றும் சேரன் ஆகியோரை தான் குறிப்பிட்டு கூறினர். அதிகபட்சமாக மீரா மிதுன் பற்றி 11 பேர் புகார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் நடிகை ஷாலு ஷம்மு தன்னை பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்தால் கண்டிப்பாக செல்வேன் என்று கூறியுள்ளார். இருப்பினும் தன்னுடைய கணிப்பு விஜய் டிவி பிரபலம் ஆல்யா மானசா தான் செல்வார் என்கிறார்.
எனினும் இதுவரை யார் பிக்பாஸ் வீட்டில் அடுத்து நுழையப்போகும் பிரபல என்று விஜய் டிவி அறிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.