பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை மீரா மிதுன். சினிமாவில் சில படங்களில் அவர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார்.
மாடலிங் துறையில் இருந்த அவர் பெண்களிடம் பண மோசடி செய்ததாக சமீபத்தில் சில சர்ச்சைகள் எழுந்தது. எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்பட்ட மீரா மிதுன் மீது இருக்கும் குறைகளை மற்றவர்கள் எடுத்து சொன்னார்கள்.
இந்நிலையில் இந்த வாரம் மீரா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறப்பட்டது. தற்போது அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது போல் ஒரு புகைப்படம் லீக் ஆகியுள்ளது.
மீரா சீக்ரெட் ரூம் or அவுட் pic.twitter.com/ObNqB1OzDy
— 🐯 No.7 🐯 (@Gods_Ruleee) July 28, 2019
மேலும், அவர் சீக்ரெட் ரூமில் உள்ளாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதற்கு இன்று இரவு நிகழ்ச்சியில் முடிவு காணலாம்.