நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரம். அங்கு அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகை. ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.
பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் திருமணம் சென்ற வருடம் நடைபெற்றது. அதன்பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆன பிரியங்கா ஹாலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது சுற்றுலா, பொழுதுபோக்கு என இருக்கும் அவர்கள் ஃபிளோரிடாவின் மியாமி கடலில் பிகினி உடையில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை பிரியங்கா வெளியிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு பிரியங்கா பிறந்தநாளை பிரம்மாண்டமாக குடும்பத்தினருடன் கொண்டாடிய நிலையில், அதன் பிறகு மியாமி கடற்கரையில் ஒரு நாள் விடுமுறையை கழித்துள்ளனர்.