பிக்பாஸின் மூன்றாவது சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிக்பாஸில் வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதற்காக வார வாரம் ஒருவர் எலினேட் செய்யப்படுகிறார்.
கடந்த ஞாயிற்று கிழமை ரேஷ்மா வெளியானதை தொடர்ந்து எந்தவொரு காரணமும் கூறப்படாமல் சரவணன் வெளியேற்றப்பட்டார்.
வீட்டில் இருந்து வெளியேறியவர் ரேஷ்மா சமீபத்தில் ஒரு பேட்டியில் பிக்பாஸ் வீட்டில் இரவு ஆனால் வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள் என்று கூறியிருந்தார்.
அதில் கவின், சாக்ஷி, லாஸ்லியா, முகேன், தர்ஷன், அபிராமி உள்ளிட்டோர் பேசிக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் சிரித்து பேசுவது எங்களுக்கு நன்றாக கேட்கும். பிறகு பகலில் தூக்கம் வருகிறது என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்று கூறியுள்ளார்.