2004 இல் எங்கள் அண்ணா என்ற விஜயகாந்த் படத்தில் நடித்த நமிதா அறிமுகமானார். அதன் பின்னர் படிப்படியாக பட வாய்ப்புகள் குறைவாவே சின்னத்திரை நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வந்தார்.
பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வந்து நீண்ட நாள் நண்பரான வீரேந்திர சவுதிரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது நமீதாவின் உடல் எடை குறைத்து செம்ம ஸ்லீம்மாக மாறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதுமட்டுமன்றி இளமையான தோற்றத்தில் ஆச்சரியம் படும் விதத்திலும் உள்ளார்.
கடைசியாக அவர் நடிப்பில் வந்த படம் ‘பொட்டு’. அது பிளாப் ஆனது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் சினிமாவை நடிக்க திரும்பியுள்ளார்.