பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வர ஆரம்பித்துள்ளார்கள். இன்று லாஸ்லியாவின் அப்பா வருகிறார். அப்பாவை பார்த்ததும் கதறி கதறி அழுகிறார் லாஸ்லியா.
இது ஒருபுறம் இருக்க லாஸ்லியாவின் காதல் யார் என்று நெட்டிசன்கள் ஆராய்ந்து வருகிறார்கள். தற்போது ஒரு தகவலும் வந்துள்ளது.
அந்தவகையில் லாஸ்லியா பணி செய்த இடத்தில் ஒரு இளைஞருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இவர்தான் லாஸ்லியாவின் முன்னாள் காதலர் என்று வதந்திகள் வரவிவருகின்றது.
இந்த வதந்தியை பார்த்த அந்த இளைஞர் மனமுடைந்து சமுகவலைத்தளத்தில் ஓர் பதிவை வெளியிட்டுள்ளார்.
தவறான விடயங்கள் தொடர்ந்தேச்சையாக பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. #Losliya மற்றும் எனக்கிடையில் ஒரு நல்ல உறவு இருக்கிறது. அது விஷமிகள் எதிர்பார்ப்பதை போன்றவொன்றல்ல. அது ஆழமான ஓர் சகோதரத்துவம். அதை நம் பெற்றோர்களும் அறிவர்.விஷமிகளே நீங்கள் தோற்று விட்டீர்கள் #BB3 @iamharishkalyan pic.twitter.com/RUeUqtEx4c
— Fazlullah Mubarak (@FazlullahMTV) September 9, 2019
அதில் “லாஸ்லியா மற்றும் எனக்கிடையில் ஒரு நல்ல உறவு இருக்கிறது. அது விஷமிகள் எதிர்பார்ப்பதை போன்றவொன்றல்ல. அது ஆழமான ஓர் சகோதரத்துவம். அதை நம் பெற்றோர்களும் அறிவர்.விஷமிகளே நீங்கள் தோற்று விட்டீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.