என்னையறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் அனிகா. அஜித்திற்கு மகளாக நடித்து அத்தனை பேரையும் அசரவைத்தார்.
இதே போல விஸ்வாசம் படத்தில் அப்பா மகள் செண்டிமெண்டை முக்கியத்துவமாக கொண்ட கதையில் மீண்டும் அவரே நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ஓணம் பண்டிகைக்காக சேலையில் அனிகா போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சிலவற்றையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது அவர் ஃபேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகின்றார்.