பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த வாரம் யார் கோல்டன் டிக்கெட்டை வாங்குவார்..? யார் வீட்டைவிட்டு வெளியேறுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இப்போது போட்டியாளர்களுக்கு நேரடியாக பைனலுக்கு செல்ல டிக்கெட் பெரும் போட்டி நடந்து முடிந்துள்ளது. கடைசியாக போட்டியாளர்களுக்கு சைக்கிள் ஓட்டும் போட்டி நடந்துள்ளது. அதில் வெற்றிப் பெற்று முகென் பைனலுக்கு செல்லும் டிக்கெட்டை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து குறைவான வாக்குகள் பெற்று சேரன் தான் வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.