கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் செம்ம பரபரப்பை உண்டாக்கும் போட்டியாளார். கவின் தற்போது ரூ 5 லட்சம் மட்டும் பெற்றுக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக முடிவு செய்துள்ளார்.
இன்று காலை வந்த புரொமோவில் சாண்டி, கவினிடம் 10 நாள் உள்ளது ஏன் வெளியேறுகிறாய், ஏன் இப்படி செய்தாய் என கண்ணீருடன் கேட்க கவின் அவரை ஆறுதல் செய்கிறார்.
தற்போது 2வது புதிய புரொமோவில் கவின் தனது உடைகளை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவது போல் உள்ளது.
பிக்பாஸ் இரண்டு சீசன்களிலும் நடக்காத ஒரு விஷயம் 3வது சீசனில் நடந்து வருகிறது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.